குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவையின் 264-வது அமர்வின் நிறைவில் அவைத் தலைவர் ஆற்றிய உரை

Posted On: 03 JUL 2024 3:43PM by PIB Chennai

மாநிலங்களவையின் 264-வது அமர்வின் நிறைவுக் கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த அமர்வு தொடங்கியது. இது அரசின் செயல்திட்டங்களை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான பாரம்பரியமாகும்.

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற மாண்புமிகு பிரதமர் தமது அமைச்சரவையை அவையில் அறிமுகப்படுத்தியதை நாம் பார்த்தோம்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 76 உறுப்பினர்கள் 21 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்வத்துடன் பங்கேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 உறுப்பினர்களின் முதல் பேச்சும் சபையில் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று அதற்குப் பதிலளித்து பிரதமர்  உற்சாகமா உரையாற்றினார்.

அவை ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக 43 நிமிடங்களை இழந்த போதிலும், மதிய உணவு இடைவேளையின் போது தொடர்ந்து விவாதம் செய்ததன் மூலமும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு அப்பால் அவை நடவடிக்கைகள் நடைபெற்றதன் மூலமும் நேரம் ஈடுசெய்யப்பட்டது. நீட்டிக்கப்பட்ட அமர்வு காரணமாக, மொத்த அலுவல் நேரம் இறுதியாக திட்டமிடப்பட்ட நேரத்திற்கு மேல் மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இதனால் அவையின் செயல்திறன் 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும் உறுப்பினர்கள் தீவிரமாக விவாதங்களில் பங்கேற்ற அதே வேளையில், அவை நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து சில கடுமையான கருத்துக்களை நான் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது. இடையூறுகளை ஏற்படுத்துவது திட்டமிடப்பட்ட அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த மதிப்புமிக்க அவையின் கௌரவத்தையும் குறைக்கிறது என்பதை நான் மீண்டும் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் கூட சபையின் மையப்பகுதிக்கு வந்த்து நாடாளுமன்ற நடைமுறைக்கும் ஒழுங்கு முறைக்கும் குந்தகம் ஏற்படுத்தும்  வியமாகும்.

இந்த அவையின் உறுப்பினர்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்மாதிரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் இது விவாதம், ஆலோசனை, உரையாடலுக்கான இடமாக இது மாறும்.

இன்று எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது மிகவும் வேதனையாக இருந்தது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பு செயல்பாடுகளில்  இருந்து விலகிச் சென்றுள்ளனர். இது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு பலம் அளித்து, அவையின் நடவடிக்கைகளில் தது புத்திசாலித்தனமான ஆலோசனையால் என்னை வழிநடத்திய  அவையின் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவையின் நடவடிக்கைகளை நடத்த எனக்கு உதவியதற்காக துணைத் தலைவர்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களும் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களில் 50 சதவீதம் பேர் இந்த அவையின் பெண் உறுப்பினர்கள் ஆவார்கள்.

அவை முன்னர், எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அமர்வின் போது நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக செயலாளர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய அயராத பணிகளை நான் பாராட்டுகிறேன்.

நன்றி.

***

PLM/AG/KV



(Release ID: 2030440) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi , Kannada