பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவன தலைவர் டாக்டர் ஜிதேந்திர சிங், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் குடிமைப்பணி உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
प्रविष्टि तिथि:
02 JUL 2024 7:21PM by PIB Chennai
இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவன தலைவர் டாக்டர் ஜிதேந்திர சிங், அந்த நிறுவன வளாகத்தில், பொது நிர்வாகத்தில் நவீன தொழில்முறை திட்டம் குறித்த 50-வது நிகழ்ச்சியில், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் குடிமைப்பணி உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பொது நிர்வாகத்தில் நவீன தொழில்முறை குறித்த 10 மாத படிப்பு, டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கட்டுப்பாட்டில் வரும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. அகில இந்தியப் பணி, முப்படைகள் மற்றும் மத்திய அரசு பணியில், துணைச் செயலாளர்/ இயக்குநர் நிலையிலான உயர் அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சியை முடிக்கும் அதிகாரிகளுக்கு பஞ்சாப் பல்கலைக்கழகத்தால், பொது நிர்வாகம் மற்றும் பொது கொள்கையில் முதுநிலைப்பட்டம் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பயிற்சித் திட்டத்தின் பொன்விழா நிகழ்வில், தாம் பங்கேற்று இருப்பதை சுட்டிக்காட்டினார். அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான இந்த அதிநவீன பாடங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கொள்கைக்கேற்ப அதிகாரிகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த அங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2030286
***
MM/RS/DL
(रिलीज़ आईडी: 2030295)
आगंतुक पटल : 66