நிலக்கரி அமைச்சகம்

பாரத் கோக்கிங் நிலக்கரி நிறுவனம், திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது

Posted On: 01 JUL 2024 7:11PM by PIB Chennai

பாரத் கோக்கிங்  நிலக்கரி நிறுவனம் (பிசிசிஎல்) அதன் பெரு நிறுவன சமூகப் பொறுப்புடமை முன்முயற்சிகளின் கீழ், கொல்கத்தாவில் உள்ள பிராமித் அறக்கட்டளையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மூலம் தன்பாத் பிராந்தியத்தைச் சேர்ந்த 150 இளைஞர்கள் பயன் பெறுவார்கள். இந்தப் பயிற்சி, வங்கி, முதலீடு, காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கிய நிதி சேவைகளில் அத்தியாவசியத் திறன்களுடன் பங்கேற்பாளர்களை ஆயத்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். மேலும் தனிநபர்கள் மற்றும் தொழில் புரிவோருக்கான நிதி நல்வாழ்வை உறுதி செய்கிறது.

தன்பாத்தில் உள்ள ஜூப்ளி ஹாலில் நடைபெற்ற விழாவில், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சலுகைக் கடிதங்களை பாரத் கோக்கிங் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும்  மேலாண்மை இயக்குநர் திரு சமிரன் தத்தா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பி.சி.சி.எல் இயக்குநர் (பணியாளர்) திரு எம்.கே.ராமையா, பிராமித் அறக்கட்டளையின் ஆலோசகர் திரு பிரசென்ஜித் குண்டு, பிராமித் அறக்கட்டளையின் இயக்குநர் திரு ஸ்வபனேந்து பிகாஸ் மண்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2030084)

PKV/AG/RR



(Release ID: 2030154) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP