நிலக்கரி அமைச்சகம்
உள்நாட்டு நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களில் தற்போதைய நுகர்வு அளவல் 18.5 நாட்களுக்கான தேவையான நிலக்கரி கையிருப்பு
प्रविष्टि तिथि:
01 JUL 2024 7:12PM by PIB Chennai
2024 ஜூன் 29 நிலவரப்படி உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 44.46 மில்லியன் டன்னாக உள்ளது. இது தற்போதைய நுகர்வு அளவின்படி 18.5 நாட்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாகும். இந்த இருப்பு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த நிலையை விட 33% அதிகமாகும். நடப்பாண்டின் முதல் காலாண்டில் நிலக்கரி உற்பத்தி 10.58 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிலக்கரி விநியோகம் 8.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிலக்கரி உற்பத்தியில் பருவமழை விளைவைக் கருத்தில் கொண்டு, நிலக்கரி அமைச்சகம் ஜூன் 30 நிலவரப்படி சுரங்கங்களில் 98.67 மில்லியன் டன் இருப்பை உறுதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் நிலையை விட 33.5% அதிகமாகும்.
***
(Release ID: 2030082)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2030152)
आगंतुक पटल : 109