கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதை சம்பந்தப்பட்டவர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் திரு சர்பானந்த சோனாவால் இன்று பங்கேற்றார்

Posted On: 01 JUL 2024 6:11PM by PIB Chennai

எதிர்வரும் பட்ஜெட்டுக்குத் தயாராகும் வகையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் புதுதில்லியில் இன்று பல்வேறு தரப்பினருடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், தொடர்புடையவர்களிடமிருந்து மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பெறுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திரு சர்பானந்த சோனாவால், நாட்டைக் கட்டமைப்பதற்கான பரிந்துரைகளையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு தொடர்படையவர்களை கேட்டுக் கொண்டார். ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நிலையான, உலகத் தரம் வாய்ந்த கடல்சார் மற்றும் உள்நாட்டு நீர்வழிகள் கட்டமைப்பை உருவாக்கத் தமது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தமது அமைச்சகம் இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்த பல உத்திசார்ந்த முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.  அதற்காக நிலையான, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி முக்கியமான, ரூ.5100 கோடி மதிப்புள்ள திட்டங்களுடன் சாகர்மாலா திட்டம், கப்பல் கட்டும் தளங்களை ஆதரிப்பதற்காகக் கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கை ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

"பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஆதரிக்கும் ஒரு வலுவான கடல்சார் சூழல் அமைப்பை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த திரு சர்பானந்த சோனாவால், வதவன் மெகா போக்குவரத்துத் துறைமுகம், குரூஸ் இந்தியா இயக்கம் போன்ற திட்டங்களின் மூலம், இந்தியாவை உலகளாவிய கடல்சார் மையமாக மாற்ற தமது அமைச்சகம் தயாராக உள்ளது என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030065

********

SMB/IR/KPG/DL



(Release ID: 2030110) Visitor Counter : 38