ஆயுஷ்

சி.சி.ஆர்.ஏ.எஸ்- சி.எஸ்.எம்.சி.ஏ.ஆர்.ஐ மற்றும் சென்னையின் சி.ஐ.எம் & ஹெச் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 30 JUN 2024 2:44PM by PIB Chennai

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருந்தியல் ஆணையம் (சி.ஐ.எம் & ஹெச் ) மற்றும் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் - கேப்டன் சீனிவாச மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் (​சி.சி.ஆர்.ஏ.எஸ்-  சி.எஸ்.எம்.சி.ஏ.ஆர்.ஐ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திரு ககன் தீப் சிங்  ஆகியோர் முன்னிலையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் புரிந்துணர்வு ஒப்பந்தம், பரிசோதனை சேவைகள், பயிற்சி அளித்தல் மற்றும் "தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் வரிசை மருந்துகளைத் தயாரிப்பதற்கான நச்சுத்தன்மை ஆய்வுகளின் தரப்படுத்தல் மற்றும் மதிப்பீட்டிற்கான ஆராய்ச்சி ஆய்வுகள்" குறித்த கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு கூட்டு கட்டமைப்பைக் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கங்கள் வருமாறு:

மருந்துகளின் தர நிர்ணயத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூல மருந்துகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பரிசோதனை செய்தல்.

சி.ஐ.எம் & ஹெச் இன் ஆய்வகத்திற்கு என்.ஏ.பி.எல் அங்கீகார பயிற்சி வழிகாட்டுதலை வழங்குதல்.

​சி.சி.ஆர்.ஏ.எஸ் ஆராய்ச்சிக் கொள்கையின் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவுக்கு ஏற்ப "தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் வரிசை மருந்துகளைத் தயாரிப்பதற்கான தரப்படுத்தல் மற்றும் நச்சுத்தன்மை ஆய்வின் மதிப்பீட்டிற்கான ஆராய்ச்சி ஆய்வுகள்" என்ற கூட்டு ஆராய்ச்சி திட்டத்தை நடத்துதல்.

***

(Release ID: 2029682)

SMB/BR/RR



(Release ID: 2029915) Visitor Counter : 12