புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
29 ஜூன் 2024 அன்று கொண்டாடப்பட்ட 18 வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது
Posted On:
30 JUN 2024 4:29PM by PIB Chennai
18-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, 29 ஜூன் 2024 அன்று, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய அளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள், ஐநா சபை முகமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட குறியீட்டுத் தகவல் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று) புள்ளியியல் அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையைத் தரவுகளுடன் வெளியிடுகிறது.
இதன் ஒரு பகுதியாக, 2024 புள்ளியியல் தினத்தை முன்னிட்டு நேற்று (29 ஜூன் 2024) இது தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டன.
இதில் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளின் தேசிய அளவிலான முன்னேற்றம் குறித்த தரவுகளை இந்த அறிக்கை முன்வைத்துள்ளது.
வங்கிக் கடன் வழங்கப்பட்ட சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 2015-16-ம் ஆண்டில் 18.32 லட்சத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 44.15 லட்சமாக அதிகரித்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 2015-16-ல் 48.32 %-ல் இருந்து 2021-22 ல் 57.60 % ஆக உயர்ந்துள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் வளர்ச்சி இலக்குகள் குறித்த தகவல்களை இந்த அறிக்கை விரிவாக வழங்குகிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியவையாகும். இவை அமைச்சகத்தின் இணையதளமான www.mospi.gov.in -ல் இடம்பெற்றுள்ளன.
***
AD/PLM/KV
(Release ID: 2029745)
Visitor Counter : 94