புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தரவுகளை எளிதில் பெறுவதற்காக இசங்க்யிகி (eSankhyiki) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 30 JUN 2024 4:27PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், உலகளாவிய புள்ளியியல் நடைமுறைகள் மற்றும் சிறந்த தரவுப் பகிர்வு தரநிலைகளை உறுதி செய்ய தொடர்ந்து செயலாற்றி வருகிறதுஇதன் ஒரு பகுதியாக திட்டமிடுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடித் தகவல்களை  வழங்குவதற்காக இந்த அமைச்சகம்  இசங்க்யிகி ( eSankhyiki - https://esankhyiki.mospi.gov.in ) என்ற தளத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டில் அதிகாரபூர்வ புள்ளி விவரங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்வதும், விரிவான தரவு மேலாண்மை மற்றும் பகிர்வு முறையை ஏற்படுத்துவதும் இந்த இணைய தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த தளம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது:

1) தரவு பட்டியல் பகுதி: இந்த பகுதி எளிதாக அணுகுவதற்காக அமைச்சகத்தின் முக்கிய தரவுகளை ஒரே இடத்தில் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

2) பேரியல் (மேக்ரோ) குறியீட்டுப் பகுதி: இந்தப் பகுதி முக்கிய விவரங்களின் கால வரிசைத் தரவை வழங்குகிறது. இது பயனர்கள் எளிதாக அணுக உதவிதரவுகளைக் காட்சிப்படுத்துவதற்கான அம்சங்களைக் கொண்டுள்ளது.

29 ஜூன் 2024 அன்று தில்லியில் நடைபெற்ற விழாவில் 16-வது நிதிக் குழுத் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா இந்தத் தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

***

AD/PLM/KV

 


(Release ID: 2029743) Visitor Counter : 100


Read this release in: English , Urdu , Hindi