பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

குறிப்பிடத்தக்க வெற்றிக் கதைகளுடன் சி.பி.ஜி.ஆர்.ஏ.எம்.எஸ் தளத்தில் தீர்க்கப்பட்ட குறைகள் குறித்து இரு வாரங்களுக்கு ஒருமுறை தெரிவிக்கப்படுகிறது

Posted On: 29 JUN 2024 9:45PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, ஜூன் 2024 முதல் 15 நாட்களில் தீர்க்கப்பட்ட குறைகளின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி 69,166 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1-15, 2024 வரையிலான காலகட்டத்தில்  ஊரக வளர்ச்சி அமைச்சகம் அதிகபட்சமாக  21,614 குறைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது. அதைத் தொடர்ந்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (7324), நிதிச் சேவைகள் துறை (6206) வருமான வரித் துறை (2890)  மற்றும் ரயில்வே வாரியம் (2296)  ஆகியவை முதல் ஐந்து அமைச்சகங்கள்/துறைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

 சி.பி.ஜி.ஆர்.ஏ.எம்.எஸ் தளத்தைப் பயன்படுத்தும் குடிமக்களின் 5 வெற்றிக் கதைகளும் துறையால் கோடிட்டுக் காட்டப்பட்டன. சி.பி.ஜி.ஆர்.ஏ.எம்.எஸ் தளத்தில் குடிமக்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த வெற்றிக் கதைகளை இந்தத்துறை வாரந்தோறும் வெளியிட உள்ளது. ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி அட்டைகள், வருமான வரி ரீஃபண்ட் போன்ற பிரச்சினைகள் சம்பந்தமானதாக இவை உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029593

******************

AD/BR/KV



(Release ID: 2029658) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP