நிலக்கரி அமைச்சகம்
கடந்த பத்து ஆண்டுகளில் நிலக்கரி உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு- நிலக்கரி இறக்குமதி அளவு வரலாறு காணாத வீழ்ச்சி
प्रविष्टि तिथि:
28 JUN 2024 7:22PM by PIB Chennai
உலக அளவில் ஐந்தாவது பெரிய நிலக்கரி வளத்தைக் கொண்ட இந்தியா, நிலக்கரி நுகர்வைப் பொறுத்தவரை இரண்டாவது பெரிய நுகர்வோராக உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் நல்ல பலனை அளித்துள்ளன. 2004-05-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை, நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.44% மட்டுமே இருந்தது. அதேசமயம், கடந்த பத்து ஆண்டுகளில், அதாவது 2014-15 நிதியாண்டு முதல் 2023-24 நிதியாண்டு வரை, இது 5.63% ஆக உயர்ந்துள்ளது.
2004-05-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை நிலக்கரி இறக்குமதி ஆண்டு அதிகரிப்பு விகிதம் 21.48% ஆக இருந்தது., 2014-15 ம் நிதியாண்டு முதல் 2023-24-ம் நிதியாண்டு வரை நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு விகிதம் பெருமளவு குறைந்து 2.49% ஆக மட்டுமே உள்ளது.
உள்நாட்டு நிலக்கரி வளங்களை மேம்படுத்துதல், புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குதல் ஆகியற்றின் உள்ளிட்டவை மூலம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் தற்சார்புப் பயணத்தை இந்தியா தொடர்கிறது.
******
ANU/SMB/PLM/KV
(रिलीज़ आईडी: 2029514)
आगंतुक पटल : 99