அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

VEGFR1 இறந்த நொதியாக உருமறைப்பு பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய்களுக்கான மருத்துவ தீர்வுகளுக்கு முக்கியமாக உள்ளது

Posted On: 28 JUN 2024 11:31AM by PIB Chennai

வளர்ச்சி காரணிகளை ஒன்றிணைத்து, உயிரணு வேறுபாடுகளை முறைபடுத்தி, பெருக்கம், உயிர்வாழ்தல், வளர்சிதை மாற்றம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் என்சைம்களின் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு செல் மேற்பரப்பு ஏற்பி, புற்றுநோய்களைத் தடுக்கும் மூலக்கூறு செயல்பாட்டை  ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துள்ளனர்.

VEGFR1 என்று அழைக்கப்படும் இந்த நொதி, தசைநார் (ஹார்மோன்கள்) இல்லாத நிலையில், சுய வெளிப்பாட்டை (தன்னியக்க தடுப்பு) நிறுத்துகிறது. முன்னுரிமை அளிக்கும் மூலக்கூறுகளைப் பயன்படுத்துவதன் மூலம் VEGFR1-ன் செயலற்ற நிலையை, பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய்களுக்கான மருத்துவ தீர்வுகளை உருவாக்குவதற்கான வழியை ஆராய்ச்சி மூலம் கண்டறிய முடியும்.

கொல்கத்தாவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) ஆராய்ச்சியாளர்கள், வாஸ்குலர் எண்டோடெலியல் வளர்ச்சி காரணி ஏற்பி (வி.இ.ஜி.எஃப்.ஆர்) எனப்படும் ஆர்.டி.கே ஒன்றை ஆய்வு செய்தனர். அதில், ஏற்பிகளின் VEGFR குடும்பம், புதிய இரத்த நாளங்களை உருவாக்கும் செயல்முறையின் முக்கிய சீராக்கி என்று தெரியவந்துள்ளது.

கருவளர்ச்சி, காயங்களை குணப்படுத்துதல், திசு மீளுருவாக்கம் மற்றும் கட்டி உருவாக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு இந்த செயல்முறை அவசியம். பல்வேறு வீரியம் மிக்க நோய்களுக்கு VEGFR-களை குறிவைப்பதன் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.

VEGFR1-ஐ செயல்படுத்துவது, புற்றுநோய் தொடர்பான வலி, மார்பக புற்றுநோயில் கட்டி உயிரணு உயிர்வாழ்வு மற்றும் மனித பெருங்குடல் புற்றுநோய் உயிரணுக்களின் இடம்பெயர்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029236 

***

MM/RS/RR


(Release ID: 2029274) Visitor Counter : 93