பாதுகாப்பு அமைச்சகம்
செசல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகத்தை அடைந்தது ஐஎன்எஸ் சுனைனா
प्रविष्टि तिथि:
27 JUN 2024 8:01PM by PIB Chennai
இந்தியக் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் சுனைனா தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நீண்ட தூர பயணத்தின் ஒரு பகுதியாக ஜூன் 26 அன்று செசல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தது.
29 ஜூன் செசல்ஸ் நாட்டின் 48 வது தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் விக்டோரியாவில் ராணுவ அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பில் இந்திய கடற்படை அணிவகுப்பு குழுவும், கடற்படை இசைக்குழுவும் பங்கேற்கும். 1976-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவப் பிரிவின் தொடர்ச்சியான பங்கேற்பைக் குறிக்கும் வகையில், ஐஎன்எஸ் சுனைனா இதில் கலந்து கொண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
துறைமுக அழைப்பின் போது, சமூக ஈடுபாடுகள், செசல்ஸ் பாதுகாப்புப் படையுடனான தொடர்புகள், சிறப்பு யோகா அமர்வு, பார்வையாளர்களுக்கு கப்பல் திறப்பு, சமூக அவுட்ரீச் திட்டம் ஆகியவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. ஐ.என்.எஸ். சுனைனாவின் நிலைநிறுத்தல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் சாகரின் தொலைநோக்குடன் ஒத்துப்போகிறது.
***
VL/PKV/AG/RR
(Release ID: 2029191)
(रिलीज़ आईडी: 2029218)
आगंतुक पटल : 125