சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
காலனி கால சட்டங்களில் தண்டனைக்கு முக்கியத்துவம் அளித்த நிலைக்கு மாறாக புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால்
Posted On:
27 JUN 2024 6:18PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சூழலில் சட்டசீர்திருத்தங்கள் என்ற மையப் பொருளுடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் சார்பில் இன்று புதுதில்லியில் ஒரு நாள் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மெக்வால், தொழில்துறை 1.0 என்பதிலிருந்து பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் தொழில்துறை 4.0 என்ற சகாப்தத்தில் இந்தியா நுழைந்துள்ளதைப் புரிந்து கொள்வது அவசியம் என்றார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து பணியாற்றும் போது செயற்கை நுண்ணறிவு எந்திரக் கற்றல், முப்பரிமாண அச்சு, ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பற்றியும் சட்டரீதியான அவற்றின் தாக்கம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எந்த சட்டப் பிரச்சனைக்கும் சிறப்பான தீர்வு சுமூகமாக தீர்வு காண்பதுதான் என்று உறுதிபடத் தெரிவித்த அவர், பிரச்சனைக்கான மாற்றுத்தீர்வு என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்று அவர் கூறினார். காலனி கால சட்டங்களில் தண்டனைக்கு முக்கியத்துவம் அளித்த நிலைக்கு மாறாக புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்று அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறினார்.
இந்த நிகழ்வுக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜித்தன் ராம் மாஞ்சி தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் சுஸ்ரி ஷோபா கரண்ட்லாஜே உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
***
SMB/KPG/DL
(Release ID: 2029190)
Visitor Counter : 66