குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அவசர நிலையைப் பிரகடனம் செய்தது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை இருளில் மூழ்கடித்துவிட்டது என்று குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார்

Posted On: 26 JUN 2024 7:38PM by PIB Chennai

அவசர நிலையைப் பிரகடனம் செய்தது உலகின்  மிகப்பெரிய ஜனநாயகத்தை இருளில் மூழ்கடித்துவிட்டது என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். அவசர நிலையின் இருண்ட நாட்களை நினைவு கூர்ந்த அவர், இந்தியாவில் தற்போது அரசியல் அமைப்புச் சார்ந்த ஜனநாயகம் மிகவும் வலுவாக இருப்பதால், அவசர நிலை நாட்கள் ஒருபோதும் திரும்பவும் வராது என்று உறுதிப்பட தெரிவித்தார்.

மத்திய மின்னணு நிறுவனத்தி் பொன்விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய திரு தன்கர், நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரித்ததோடு, அவர்களை புதிய இந்தியாவின்  சிற்பிகள் என்று  பாராட்டினார். நஷ்டத்தில் இயங்கிய இந்தப் பொதுத்துறை நிறுவனம், மினிரத்னா தகுதியுடையதாக தற்போது மாறியிருப்பதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

சூர்ய மின்சக்தி துறையில்  இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு தன்கர், புதுப்பிக்கவல்ல எரிசக்தி என்பது ஒரு மாற்று மட்டுமல்ல, அதுவே எதிர்காலம் என்றார். நீடிக்கவல்ல எரிசக்தி தீர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், பசுமையான, தூய்மையான இந்தியாவிற்கு மத்திய மின்னணு நிறுவனம் பங்களிப்பு செய்கிறது என்றார்.

முன்னதாக, இந்த நிறுவனத்தின் பொன்விழா இலச்சினையை வெளியிட்ட குடியரசு துணைத்தலைவர் பொன்விழா மண்டபத்தையும் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்  (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், துறையின் செயலாளரும், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என் கலைசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028884

***

SMB/RS/DL



(Release ID: 2028901) Visitor Counter : 35