குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சர்வதேச யோகா தினத்தன்று காதியின் யோகா துணிகள் மற்றும் தரைவிரிப்புகள் அமோக விற்பனை
பல்வேறு அரசு துறைகளுக்கு ரூ.8.67 கோடி மதிப்பிலான யோகா துணிகள் மற்றும் தரைவிரிப்புகளை காதி வழங்கியது
Posted On:
26 JUN 2024 5:55PM by PIB Chennai
இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம் இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான காதி கைவினை தொழிலாளர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்தது. 2024, ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், நாடு முழுவதும் உள்ள 55 காதி நிலையங்கள் மூலம் அரசின் பல்வேறு துறைகளுக்கு ரூ. 8,67,87,380 கோடி மதிப்பிலான 1,09,022 யோகா தரைவிரிப்புகள் மற்றும் 63,700 யோகா ஆடைகளை விற்பனை செய்தது.
இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்ட காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வணிகக் குறியீடு ஆற்றல் இந்திய பாரம்பரிய யோகாவை மட்டுமின்றி, காதிப் பொருட்களையும் பிரபலப்படுத்தியுள்ளது என்றார். இந்த ஆண்டு யோகாவுக்கான காதிப் பொருட்களின் அமோக விற்பனை காதி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறினார்.
தில்லி, கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள காதி பவன், ஆயுஷ் அமைச்சகத்திற்கு மட்டும் 50 ஆயிரம் யோகா தரைவிரிப்புகளையும், 50 ஆயிரம் யோகா ஆடைகளையும் வழங்கியதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் ஸ்ரீநகருக்கு 25 ஆயிரம் காதியோகா தரைவிரிப்புகளும் 10 ஆயிரம் யோகா ஆடைகளும் அனுப்பபட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028855
***
SMB/RS/DL
(Release ID: 2028897)
Visitor Counter : 62