அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்

Posted On: 26 JUN 2024 6:35PM by PIB Chennai

காசியாபாதில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (சிஇஎல்) நிறுவனத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (26.06.2024) பங்கேற்றார்.

50 ஆண்டுகளை இந்நிறுவனம் நிறைவு செய்வதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்த நிறுவனத்திற்கு "மினி ரத்னா" அந்தஸ்து   வழங்கப்படுவதாகக் கூறினார். பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனம் மேலும் பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். 50 ஆண்டுகால அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் வெற்றி ஆகியவற்றை இந்த நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதி ஸ்திரத்தன்மை, லாபம் ஆகியவை புதிய உயரங்களைத் தொட்டுள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக இருந்த சிஇஎல் நிறுவனம் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக மாறியுள்ளது என்றும், தொடர்ந்து 3-வது ஆண்டாக சிஇஎல் நிறுவனம் மத்திய அரசுக்கு ஈவுத்தொகையை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

-----

SMB/PLM/KPG/ DL



(Release ID: 2028887) Visitor Counter : 32