பாதுகாப்பு அமைச்சகம்

‘முதலில் பயன்படுத்துவதில்லை & கடுமையாக திருப்பித்தாக்குதல்’ என்ற கோட்பாட்டின்படி இந்தியாவின் அணுஆயுதப் பாதை முன்வைப்பு தனித்துவமானது: முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான்

Posted On: 26 JUN 2024 5:16PM by PIB Chennai

முதலில் பயன்படுத்துவதில்லை & கடுமையாக திருப்பித்தாக்குதல்’ என்ற கோட்பாட்டின்படி இந்தியாவின் அணுஆயுதப் பாதை முன்வைப்பு தனித்துவமானது என்று முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (26.06.2024), வான் ஆற்றல் ஆய்வுக்கான மையம் ஏற்பாடு செய்திருந்த ‘அணு ஆயுத உத்தி: சமகால போக்குகள் மற்றும் எதிர்கால சாத்தியங்கள்’ என்பது பற்றிய கருத்தரங்கில் அவர் முக்கிய உரையாற்றினார்.

மரபார்ந்த போர்முறையின் தன்மையின் குணாம்சங்களும் மாறியிருப்பதை அவர் தமது உரையில் எடுத்துரைத்தார். புவிசார் அரசியல் தளத்தில் அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் மீண்டும் மையப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆழமான சிந்தனை, புதிய கோட்பாடுகளை உருவாக்குதல், அணுஆயுத கட்டமைப்பின் நிர்வாகம், கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கணினிகள், புலனாய்வு, தகவல், கண்காணிப்பு, உளவுப்பார்த்தல் ஆகியவற்றில் பாதுகாப்பு குறித்த மறு சிந்தனை பற்றிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

***

 SMB/RS/DL



(Release ID: 2028870) Visitor Counter : 28