ஜவுளித்துறை அமைச்சகம்
இந்தியாவில் உற்பத்தி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம்:திரு கிரிராஜ் சிங்
Posted On:
25 JUN 2024 5:40PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கு தனித்துவமான சந்தைத் தளமாகும் என்றும் உலகத்திற்கு இந்தியாவின் நவீன போக்குகள் மற்றும் பலவகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதாக இருக்கும் என்றும் அமைச்சர் தொடக்க உரையில் குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
இந்தியா தற்போது 7.2 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்றும் 2027-28-ல் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் சந்தை மதிப்பு தற்போது 165 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், இது விரைவில் 350 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் 2030 வாக்கில் இந்த அளவை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
ஆயத்த ஆடைகள் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை ரூ.10,000 கோடி அளவுக்கு விரிவுபடுத்துவதாக அமைச்சர் திரு கிரிராஜ் சிங் அறிவித்தார். இந்தக் கண்காட்சியையொட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028560
***
SMB/KPG/DL
(Release ID: 2028611)
Visitor Counter : 54