சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய இணையமைச்சர்கள் திருமதி அனுப்பிரியா படேல் மற்றும் திரு ஜாதவ் பத்ரப்ராவ் கண்பத்ராவ் ஆகியோர் முன்னிலையில் மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா தேசிய வயிற்றுப்போக்கை நிறுத்தும் இயக்கம் 2024-ஐ தொடங்கி வைத்தார்
Posted On:
24 JUN 2024 6:49PM by PIB Chennai
குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார். மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்கள் திருமதி அனுப்பிரியா பட்டேல், திரு ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். பிரச்சார இயக்கத்திற்கான இலட்சினை, சுவரொட்டிகள், வானொலி விளம்பரங்கள் உள்ளிட்டவற்றையும் இவர்கள் வெளியிட்டனர். மேலும் வயிற்றுப் போக்கு காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கான ஓஆர்எஸ் கரைசல் மற்றும் ஸிங்க் மாத்திரைகளையும் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கினர்.
வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பதை முற்றிலும் தடுப்பதே இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஜெ பி நட்டா, ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் கட்டமைப்பு விரிவாக்கம் போன்ற திட்டங்கள், வயிற்றுப் போக்குக் காரணமாக குழந்தைகளிடையே ஏற்படும் உயிரிழப்பை குறைக்க பெருமளவு உதவியிருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவில் வயிற்றுப் போக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த சுகாதாரப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
***
PKV/MM/AG/DL
(Release ID: 2028366)
Visitor Counter : 83
Read this release in:
Odia
,
Odia
,
Odia
,
Odia
,
Odia
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Punjabi