நிலக்கரி அமைச்சகம்

ஜார்க்கண்டில் நிலத்தடியில் நிலக்கரி வாயுமயமாக்கலுக்கான இந்தியாவின் முதலாவது முன்னோடி திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது

Posted On: 24 JUN 2024 10:45AM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் நிலையான வழிகாட்டுதலின் கீழ், ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கஸ்டா நிலக்கரி சுரங்கம், நிலத்தடி நிலக்கரி வாயுமயமாக்கலுக்கு ஒரு புதுமையான முன்னோடித் திட்டத்தை தொடங்கியுள்ளது. நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டு வரும் முனைப்பான பன்முகப்படுத்தும் முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது. மீத்தேன், ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு போன்ற மதிப்புமிக்க வாயுக்களாக மாற்றுவதற்கு, நிலக்கரி வாயுமயமாக்கலைப் பயன்படுத்துவதன் மூலம், நிலக்கரித் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த வாயுக்களை சிந்தடிக் இயற்கை வாயு, எரிபொருட்களுக்கான ரசாயன மூலப்பொருட்கள், உரங்கள், வெடிபொருட்கள் மற்றும் பிற தொழில்துறைக்குப் பயன்படுத்தலாம். நிலக்கரி எரிவாயுமயமாக்கல் திட்டங்களை ஊக்குவிக்க நிலக்கரி அமைச்சகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது, நிலக்கரியை பல்வேறு உயர் மதிப்பு ரசாயனப் பொருட்களாக மாற்றுவதற்கான அவற்றின் திறனை அங்கீகரித்துள்ளது.

2015 டிசம்பரில், நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி உள்ள பகுதிகளில் எரிவாயுமயமாக்கலுக்கலின் விரிவான கொள்கை கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கைக்கு இணங்க, இந்திய புவி-சுரங்க நிலைமைகளுக்கு ஏற்ப, யு.சி.ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த கோல் இந்தியா கஸ்டா நிலக்கரி சுரங்கத்தை தேர்ந்தெடுத்தது. கனடாவைச் சேர்ந்த சிஎம்பிடிஐ ராஞ்சி மற்றும் எர்கோ எக்ஸெர்ஜி டெக்னாலஜிஸ்  நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

இந்த முன்னோடித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது இந்தியாவின் எரிசக்தித் துறையில் மாற்றத்தக்க வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நாட்டின் நிலக்கரி வளங்களின் நிலையான மற்றும் திறமையான பயன்பாட்டை வெளிப்படுத்தும்.

இந்த முன்னோடி முன்முயற்சியை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு நிலக்கரி அமைச்சகம் உறுதியான ஆதரவை வழங்குவதுடன், இந்தியாவின் எரிசக்தித் துறையில் அதன் நேர்மறையான தாக்கத்தை எதிர்நோக்குகிறது. ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்   தலைமையிலான இந்த நிலையான முன்முயற்சி, நிலக்கரி வாயுமயமாக்கல் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிப்பதுடன், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி, நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும். முன்னோடித் திட்டம்  வெற்றியடையும்போது, நிலக்கரி பயன்பாட்டில் புதிய தரங்களை நிர்ணயிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

SMB/MM/AG/KV



(Release ID: 2028247) Visitor Counter : 45