திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் இந்தியா திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழிப் பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த சுகாதாரத்துறையைச் சேர்ந்த 32 இளம் வல்லுநர்களுக்கு பாராட்டு நிகழச்சி - மத்திய இணை அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி பங்கேற்பு

Posted On: 22 JUN 2024 8:30PM by PIB Chennai

திறன் இந்தியா சர்வதேசத் திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழிப் பயிற்சியின் பி1 தர நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்த சுகாதாரத் துறையைச் சேர்ந்த 32 வல்லுநர்களை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சௌத்ரி பாராட்டி கௌரவித்தார். இந்திய செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வாய்ப்புகளை வழங்குவதற்காக, மொழி திறன்களுடன் அவர்களைத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. 

இது தொடர்பாக நடைபெற்ற விழாவில் இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத் தலைமைச் செயல் அதிகாரி  திரு வேத் மணி திவாரி உள்ளிட்டோர் பங்கேற்று, விண்ணப்பதாரர்களை ஜெர்மனிக்கு வழியனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌவுத்ரி, 2047-ம் ஆண்டுக்குள் நாட்டையும், கிராமப்புறங்களையும் வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான தெளிவான செயல்திட்டத்துடன் இந்தியா செயல்படுகிறது என்றார். புதிய வாய்ப்புகளை நாட்டின் ஆர்வமுள்ள இளம் தொழில் வல்லுநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜெர்மனியில் மட்டும் தகுதியான நபர்களுக்கு சுமார் 18 லட்சம் வேலை வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் பணியிடங்களை நிரப்புவதில் திறன் பெற்ற இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் திரு சௌத்ரி கூறினார்.

உலகளாவிய திறன் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான  இயக்கத்தின் ஒரு பகுதியாக, இதுவரை பல்வேறு நாடுகளில் 58,000-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி பெற்ற இந்தியர்கள் வெற்றிகரமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டு இந்திய இளைஞர்களுக்கு உயர்தர பயிற்சி அளிப்பதில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் போன்ற அரசின் திறன் பயிற்சி நிறுவனங்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களை  அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி வாழ்த்தினார்.

***

ANU/PKV/PLM/KV


(Release ID: 2028104) Visitor Counter : 60


Read this release in: Marathi , English , Urdu , Hindi