நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நாட்டில் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த இந்திய தர நிர்ணய அமைவனம் இரண்டு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 22 JUN 2024 6:18PM by PIB Chennai

இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS-பிஐஎஸ்) இரண்டு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஐஎஸ் 18590: 2024 மற்றும் ஐஎஸ் 18606: 2024, ஆகிய இந்த தரநிலைகள் எல், எம் மற்றும் என் வகைகளில் மின்சார வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தரநிலைகள் மின்சார வாகனங்களின் முக்கியமான அங்கமான பவர்டிரெய்ன் மீது கவனம் செலுத்துகின்றன. இது கடுமையான பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. கூடுதலாக, இவை பேட்டரிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வலியுறுத்துகின்றன. அவை சக்திவாய்ந்தவை மற்றும் பாதுகாப்பானவை என்பதை இந்தத் தர நிலைகள் உறுதி செய்கின்றன.

இந்த தரநிலைகள் உற்பத்தி முதல் செயல்பாடு வரை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவரின் பாதுகாப்பையும் இவை உறுதி செய்கின்றன. இந்தப் புதிய தரநிலைகளுடன், மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் அமைப்புகள் உட்பட அவற்றின் பாகங்களுக்கான தரநிலைகள் 30 ஆக உயர்ந்துள்ளன.

நாட்டில் நிலையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் திறன் வாய்ந்த போக்குவரத்து முறைக்கு தர நிலைகள் முக்கியமானவையாகும்.

 

***

SRI /PLM/DL



(Release ID: 2028003) Visitor Counter : 51