விவசாயத்துறை அமைச்சகம்
சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக வேளாண் விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டும்- மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
Posted On:
22 JUN 2024 5:47PM by PIB Chennai
புதுதில்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று (22-06-2024) தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக விஞ்ஞானிகள் பணியாற்றி இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நாட்டில் உள்ள விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள் என்று திரு சௌகான் கூறினார்.
இந்தியாவை உலகின் உணவு மையமாக மாற்றவும், உலகிற்கு உணவளிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், மாறிவரும் பருவநிலையை எதிர்கொள்ளவும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார். நமது வேளாண் கொள்கைகள் மற்றும் ஆராய்ச்சிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். விவசாயிகளை அறிவியலோடு இணைக்க வேண்டும் என்றும் அதற்கு வேளாண் அறிவியல் மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, இந்திய விவசாயத்தை தற்சார்புடையதாகவும் வளமானதாகவும் மாற்ற உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என உறுதிபூண்டனர்.
***
SRI /PLM/DL
(Release ID: 2027993)
Visitor Counter : 50