பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்தியா தற்போது பெரும்பாலான துறைகளில் மற்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும் சில துறைகளில் பிற நாடுகளை விட முன்னணியிலும் உள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
22 JUN 2024 4:23PM by PIB Chennai
இந்தியா தற்போது பெரும்பாலான துறைகளில் உலகளாவிய வரையறைகளில் சிறந்து விளங்குகிறது என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
எகனாமிக் டைம்ஸ் ஏற்பாடு செய்த பொதுத்துறை நிறுவனங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். சில பகுதிகளில் துறைகளில் மற்ற பெரிய வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது என்று அவர் கூறினார். சில துறைகளில் அந்த நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் இயக்கிகளாக இவை விளங்குவதாகவும் பொதுத்துறை நிறுவனங்களை அமைச்சர் பாராட்டினார்.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் இன்று உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த நிறுவனங்களின் இணையற்ற முயற்சிகள் காரணமாகவே உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில் கண்டுபிடிப்புக் குறியீட்டில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று உலக அளவில் 40-வது இடத்தில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார். திறன் மேம்பாட்டுப் பிரிவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) விருது பெற்றது. சிறந்த பணியாளர் சேவையில் ஹெச்பிசிஎல் நிறுவனமும், உள்நாட்டு தொழில்நுட்பத்தை விரைந்து உருவாக்குதலில் பிஹெச்இஎல் (பெல்) நிறுவனமும் விருதுகளை வென்றன.
***
SRI /PLM/DL
(Release ID: 2027980)
Visitor Counter : 62