சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காட்டுத் தீ தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது
Posted On:
21 JUN 2024 7:43PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் டேராடூனில் உள்ள இந்திய வன நில அளவை மையத்தில் காட்டுத் தீ தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் காட்டுத் தீ மேலாண்மை மற்றும் தணிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், இந்திய வன நில அளவை நிறுவனத்தின் தலைமை இயக்குநர், இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் இந்த நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், பொதுமக்கள் பங்களிப்புடன் காட்டுத் தீயை தடுப்பதற்கு வலுவான உத்தியை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டில் தற்போதுள்ள உள்ள காட்டுத் தீ எச்சரிக்கை அமைப்பின் நிலை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
அடிக்கடி காட்டுத் தீ விபத்து ஏற்படும் பகுதிகளுக்கு உயர் முன்னுரிமை அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாநிலங்கள் பொருத்தமான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
***
ANU/SMB/PLM/KV
(Release ID: 2027909)
Visitor Counter : 88