திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
21 JUN 2024 8:38PM by PIB Chennai
10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்ற யோகா பயிற்சி நிகழ்வு புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில் நடைபெற்றது.
துறைச் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி மற்றும் அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த யோகா பயிற்சி முகாமில் பங்கேற்றனர். "தமக்கான மற்றும் சமூகத்திற்கான யோகா" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வு, தனிநபர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதிலும் யோகாவின் சக்தியை எடுத்துக் காட்டியது.
திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் யோகா மேம்பாட்டு முயற்சிகள் தொடர்பாக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் இதுவரை 1.35 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வெற்றிகரமாக யோகா பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
***
ANU/SMB/PLM/KV
(रिलीज़ आईडी: 2027901)
आगंतुक पटल : 91