பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

10-வது சர்வதேச யோகா தினம்: இந்தியக் கடலோரக் காவல்படை 60 இடங்களில் நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUN 2024 3:44PM by PIB Chennai

இந்தியக் கடலோரக் காவல்படை 10-வது சர்வதேச யோகா தினத்தை  நாடு முழுவதும் இன்று (21.06.2024) 60 இடங்களில் நடத்தியது. முதன்மை நிகழ்வு புதுதில்லியில் நடைபெற்றது.  இதற்கு கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர்  திரு ராகேஷ் பால் தலைமை தாங்கினார். இவருடன் 1000-க்கும் அதிகமான வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.  அன்றாட வாழ்க்கையில் குறிப்பாகக் கடலோரக் காவல் படையினர் போன்றோருக்கு யோகாவின் ஒருங்கிணைப்பு முக்கியத்துவத்தை  அவர் உரையாற்றும் போது எடுத்துரைத்தார்.

பிரபல யோகா பயிற்சியாளர் திருமதி நேஹா மெத்தானியும் அவரது 9 உறுப்பினர் குழுவினரும் யோகா பற்றிய மதிப்புமிகு கோட்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். தொடக்க நிலை பயிற்சியாளர்கள் முதல் தேறிய பயிற்சியாளர்கள் வரை இந்த அமர்வில் பங்கேற்றனர்.

------

SMB/KPG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2027663) வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Hindi_MP , Urdu , Marathi