பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

10-வது சர்வதேச யோகா தினத்தன்று நாடு முழுவதும் 8 லட்சம் என்சிசி மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்

प्रविष्टि तिथि: 21 JUN 2024 12:43PM by PIB Chennai

2024 ஜூன் 21 அன்று 10-வது சர்வதேச யோகா தினத்தன்று நாடு முழுவதும் 8 லட்சம் என்சிசி மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்த அமர்வுகள் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், சூரியக் கோயில் (கொனார்க், ஒடிசா), செங்கோட்டை (தில்லி), தால் ஏரி (ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்), சபர்மதி ஆற்றங்கரை (அகமதாபாத், குஜராத்), சாஞ்சி ஸ்தூபம் (சாஞ்சி, மத்தியப்பிரதேசம்),  கேட்வே ஆஃப் இந்தியா (மும்பை, மகாராஷ்டிரா), நைனிடால் ஏரி (நைனிடால், உத்தராகண்ட்), ஜான்சி கோட்டை (ஜான்சி, உத்தரப்பிரதேசம்), விக்டோரியா நினைவகம் (கொல்கத்தா, மேற்கு வங்கம்) உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஆகியவற்றில் நடைபெற்றன.

தில்லி கன்டோன்மென்ட் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் உள்ள தில்லிப் பகுதியின் ராணுவத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய ராணுவ துணைத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படையின் (என்சிசி) தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், மூத்த அதிகாரிகள், சுமார் 250 என்சிசி மாணவர்களுடன் இணைந்து லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி யோகாசனங்கள் செய்தார்.

**

(Release ID: 2027329)

SMB/KPG/RR


(रिलीज़ आईडी: 2027484) आगंतुक पटल : 88
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Manipuri , English , Urdu , Marathi