சுரங்கங்கள் அமைச்சகம்
நமக்கும், சமுதாயத்திற்குமான யோகா என்ற கருப்பொருளுடன் சுரங்க அமைச்சகம் 10-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது
प्रविष्टि तिथि:
21 JUN 2024 11:43AM by PIB Chennai
நமக்கும், சமுதாயத்திற்குமான யோகா என்ற மையக் கருத்துடன் 10-வது சர்வதேச யோகா தினத்தை மத்திய சுரங்க அமைச்சகம் புதுதில்லியில் இன்று கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்தராவ் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய வி.எல்.காந்தராவ், பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த தினமும் யோகா பயிற்சி செய்ய ஊக்குவித்தார்.
ஆயுஷ் அமைச்சகத்தின் நடைமுறைப்படி யோகா பயிற்சி நடைபெற்றது. 2014-ம் ஆண்டில் ஐநா பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உடல், மனநலம் மற்றும் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. யோகாவின் நன்மைகள் குறித்து தனது ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுரங்க அமைச்சகம் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது.
***
(Release ID: 2027302)
SRI/MM/RS/RR
(रिलीज़ आईडी: 2027467)
आगंतुक पटल : 92