தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மும்பை சர்வதேச திரைப்படவிழா 2024 வண்ணமிகு நிகழ்வுகளுடன் நாளை நிறைவடைகிறது


உலகம் முழுவதுமிலிருந்து சிறந்த திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன

Posted On: 20 JUN 2024 6:47PM by PIB Chennai

மும்பை சர்வதேச திரைப்படவிழா 2024 கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நாளை நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவின் போது, தங்கச் சங்கு மற்றும் வெள்ளி சங்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது. திரைப்பட தயாரிப்பு கலையை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடும் விதமாக, நிறைவு விழா நடைபெற உள்ளது.  

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா 2024 நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், உள்நாட்டில் இருந்தும், உலகெங்கிலும் இருந்து வந்துள்ள திரையுலக பிரபலங்கள், என்றும் நினைவுகூரத்தக்க அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திரைப்பட விழாவில், உலகம் முழுவதுமிலிருந்து ஏராளமான சிறந்த குறும்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் பெர்லினாலே ஷார்ட்ஸ் மற்றும் ஆஸ்கார் திரைப்படத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

பெர்லினாலே ஷார்ட்ஸ் திரைப்படம், பன்முகத்தன்மை மற்றும் அரிய திரைபட உணர்வுகளை வெளிப்படுத்தும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027154

***

AD/MM/RS/DL



(Release ID: 2027208) Visitor Counter : 17