தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஆவணப் படங்களின் நிதிக்கான தீர்வுகளைப் பற்றி விவாதம்
प्रविष्टि तिथि:
20 JUN 2024 4:16PM by PIB Chennai
நடந்து வரும் 18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவை ஒட்டி, இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 'ஆவணப்படம்: நிதிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல்' என்ற தலைப்பில் ஒரு திறந்த விவாத மன்றத்திற்கு ஏற்பாடு செய்தது. திரைப்படத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
விவாதத்தைத் தொடங்கி வைத்த, சாந்தாராம் விருது பெற்றவரும், தேசிய விருது பெற்றவருமான திரு சஞ்சித் நார்வேகர், இந்தியாவில் ஆவணப்படங்களுக்கு பணம் செலுத்தும் பார்வையாளர்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்தகைய கலாச்சாரம் உருவாகாத வரையில் ஆவணப்படங்களை நிதி ரீதியாக உருவாக்க முடியாது என அவர் கூறினார்.
திரைப்பட விமர்சகரும், எழுத்தாளருமான திரு பிரேமேந்திரா மஜூம்தர், இந்திய ரசிகர்கள் ஆவணப்படங்களைப் பார்க்கும் கலாச்சாரம் உருவாகவில்லை என்று கூறினார். முதலில் பணம் செலுத்தும் ரசிகர்கள் தளத்தை நிறுவ வேண்டும் என்று கூறியதன் மூலம் இந்த உணர்வை அவர் எதிரொலித்தார். மும்பை சர்வதேச திரைப்பட விழா போன்ற திரைப்பட விழாக்கள் இந்த விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளரும், இயக்குநரும், புகைப்பட நிபுணருமான திரு தரம் குலாட்டி, ஆவணப்படங்களுக்கான பிரத்யேக OTT தளங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். நவீன தொழில்நுட்பம் ஆவணப்படம் தயாரிப்பதற்கான செலவைக் குறைத்து, திரைப்பட இயக்குநர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு சுயநிதியை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான டாக்டர் தேவ் கன்யா தாக்கூர், ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் யூடியூப் மற்றும் OTT சேவைகள் போன்ற வளர்ந்து வரும் தளங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த அமர்வை திரைப்பட தயாரிப்பு தொழிலதிபர் திருமதி மாயா சந்திரா நெறிப்படுத்தினார்.
***
AD/PKV/AG/DL
(रिलीज़ आईडी: 2027135)
आगंतुक पटल : 91