தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மும்பை சர்வதேசத் திரைப்படவிழாவில் ஒளிப்பதிவாளர்கள் சன்னி ஜோசப், ஆர் வி ரமணி ஆகியோரின் உரையாடல் அமர்வு

Posted On: 19 JUN 2024 6:13PM by PIB Chennai

திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை ஒருங்கிணைக்கும் எல்லைகளுக்கு அப்பால் என்று தலைப்பிடப்பட்ட உரையாடல் நிகழ்வு மும்பை சர்வதேசத் திரைப்படவிழாவில்  நடைபெற்றது. ஒளிப்பதிவாளர்கள்  சன்னி ஜோசப், ஆர் வி ரமணி ஆகியோர் இந்த உரையாடல் அமர்வில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர். ஔிப்பதவின் கலை மற்றும் தத்துவ விவரங்கள் இந்த உரையாடல் அமர்வில் இடம் பெற்றது.

இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றவரும், பிரபல ஒளிப்பதிவாளருமான சன்னி ஜோசப் இந்த அமர்வைத் தொடங்கி வைத்து பேசுகையில், ஒருமைத் தன்மை மற்றும் ஒற்றுமை உணர்வைப் பிரதிபலிக்கின்ற திரைப்படத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். “அன்பு கொண்டவர்களே வாழ்கின்றவர்கள்” என்ற சமூக சீர்த்திருத்தவாதி நாராயணகுருவின் மேற்கோளை சுட்டிக்காட்டிய அவர், ஒரு நிமிடத்திற்கு 24 ப்ரேம்களைக் கொண்ட சினிமா நேசிக்கப்படுகிறது என்றார். திரைப்படமாக இருந்தாலும் ஆவணப்படமாக இருந்தாலும் அவை சமூகத் தேவைகளை, போதாமைகளை  பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கண்டறிவதற்கு திரைக்கதை சுருக்கப் பிரதி பயன்படும் என்றாலும் கோட்பாட்டுக் குறிப்பும் திரைப்படத் தயாரிப்பாளரின் கண்ணோட்டமும் இணைந்திருப்பதால்  எப்போதும் அது தேவையாக இருப்பதில்லை என்று தேசிய திரைப்பட விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான ஆர் வி ரமணி கூறினார்.   

இந்த அமர்வில் சன்னி ஜோசப், ஆர் வி ரமணி ஆகியோரின் திரைப்படங்கிளிலிருந்து சில காட்சிகள்  விளக்கத்திற்காக திரையிடப்பட்டன.

***

(Release ID: 2026665)

AD/SMB/KPG/RR



(Release ID: 2027097) Visitor Counter : 9