தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் பணப் பரிமாற்றச் சேவைகளை மேலும் திறம்பட வழங்க இந்திய அஞ்சலக வங்கி, ரியா மணி டிரான்ஸ்ஃபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது

Posted On: 19 JUN 2024 5:56PM by PIB Chennai

இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, திறன் வாய்ந்த மற்றும் வசதியான வகையில் சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகளை  வழங்க முடிவு செய்துள்ளன. இதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த ஒத்துழைப்பால் இந்தியா முழுவதும் தொலைதூர பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் குறைந்த செலவிலான நிதி சேவைகள் கிடைக்கும்.

நாட்டின் மக்கள் தொகையில் அறுபத்தைந்து சதவீதம் பேர் குறைந்த நிதி உள்கட்டமைப்பு வசதிகளுடன் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடும்பத்தினர் வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு அனுப்பப்படும் பணத்தைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.  இதைத் தவிர்க்க இந்திய அஞ்சலக வங்கியும், ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.  

இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை நாடு முழுவதும் உள்ள  25,000-க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் உடனடியாகப் பெற முடியும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அஞ்சலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான திரு ஆர் விஸ்வேஸ்வரன், கிராமப்புற இந்தியா நமது தேசத்தின் இதயமாக உள்ளது என்றார். கிராமப்புறங்களைச் சேர்ந்த பலர்  வெளிநாடுகளில் பணி புரியும் தங்களது குடும்பத்தினர் அனுப்பும் பணத்தைப் பெற்று பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். அவர்களுக்குப் பயன்  அளிக்கும் வகையில், இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை  கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகப் பெற்றுத்தர இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று  அவர் தெரிவித்தார்.

***

AD/PLM/KPG/DL


(Release ID: 2026679) Visitor Counter : 75


Read this release in: English , Urdu , Hindi , Telugu