நிலக்கரி அமைச்சகம்
60 நிலக்கரி சுரங்கங்களுக்கான 10-வது சுற்று ஏலத்தை ஜூன் 21 அன்று மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
19 JUN 2024 4:44PM by PIB Chennai
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த கட்ட நிலக்கரித் தொகுதி ஏலங்களை நிலக்கரி அமைச்சகம் தொடங்க உள்ளது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, 10-வது சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களை 2024, ஜூன் 21 அன்று ஹைதராபாத்தில் தொடங்கி வைக்க உள்ளார். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, தெலங்கானா துணை முதலமைச்சர் திரு மல்லு பட்டி விக்ரமார்கா, நிலக்கரி அமைச்சகச் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
முந்தைய சுற்றுகளில் வெற்றிகரமாக ஏல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து 10-வது சுற்றில் வணிக நிலக்கரி சுரங்க ஏலங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
பீகாரில் 3, சத்தீஸ்கரில் 15, ஜார்க்கண்டில் 6, மத்தியப்பிரதேசத்தில் 15, மகராஷ்ட்ராவில் 1, ஒடிசாவில் 16, தெலங்கானாவில் 1, மேற்கு வங்கத்தில் 3 சுரங்கங்கள் இந்த சுற்றில் ஏலம் விடப்பட உள்ளன.
ஏல விதிமுறைகள், காலக்கெடு போன்றவை குறித்த விரிவான தகவல்களை எம்எஸ்டிசி (MSTC) ஏல தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
***
AD/PLM/KPG/RR/DL
(रिलीज़ आईडी: 2026669)
आगंतुक पटल : 112