வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது

Posted On: 19 JUN 2024 1:18PM by PIB Chennai

கடந்த  நிதியாண்டான 2023-24-ம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் இந்தியா ரூ.60,523.89 கோடி (7.38 பில்லியன் டாலர்) மதிப்பிலான 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறால் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. அமெரிக்காவும் சீனாவும் இந்திய கடல் உணவுப் பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்களாக இருந்தன. 2023-24-ம் நிதியாண்டில், அளவின் அடிப்படையில் ஏற்றுமதி 2.67 சதவீதம் அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி மட்டும் ரூ.40,013.54 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட மீன் இரண்டாவது பெரிய கடல் உணவு ஏற்றுமதிப் பொருள் என்ற இடத்தைப் பிடித்தது. இதன் ஏற்றுமதி ரூ.5,509.69 கோடி மதிப்புக்கு மேற்கொள்ளப்பட்டது.

முந்தைய 2022-23-ம் நிதியாண்டில், மொத்தம் 17,35,286 மெட்ரிக் டன் கடல் உணவை இந்தியா ஏற்றுமதி செய்தது.

பல சவால்கள் இருந்தபோதிலும் இந்தியா இந்த சாதனையை எட்டியுள்ளதாக கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திரு டி.வி.சுவாமி தெரிவித்துள்ளார்.

 

***

 

AD/PLM/KPG/R/DL


(Release ID: 2026666) Visitor Counter : 141