சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
குடியரசுத் தலைவர் நாளை பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உடல் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தை பார்வையிடுகிறார்
प्रविष्टि तिथि:
19 JUN 2024 1:58PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (ஜூன் 20, 2024) செல்கிறார்.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பார். பின்னர் அந்த வளாகத்தில் உள்ள மைதானத்தில் மரக்கன்று நடுவார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் நிறுவனத்தைப் பார்வையிடுவார். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து அவர்களின் சுகாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமைகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். பின்னர், குடியரசுத் தலைவர் திருமதி முர்மு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் நிறுவன ஊழியர்களிடையே உரையாற்றுவார்.
***
(Release ID: 2026488)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2026543)
आगंतुक पटल : 184