தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
காட்சிகளில் குறியீடுகள் மூலம் விவரிப்பது தொடர்பான அமர்வு: மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
18 JUN 2024 8:01PM by PIB Chennai
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பங்கேற்ற 'காட்சிகளில் குறியீடு தொடர்பான விவாத அமர்வு நடைபெற்றது. மலையாளம், தமிழ் மற்றும் இந்தி சினிமா மற்றும் சர்வதேச திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஒளிப்பதிவு கலை குறித்த தனது ஆழமான கருத்துக்களை இதில் பகிர்ந்து கொண்டார். இந்த அமர்வை மதிப்புமிக்க திரைப்பட விமர்சகர் நம்ரதா ஜோஷி நெறிப்படுத்தினார்.
ஒரு காட்சிக்குள் குறியீட்டையும் புதிரையும் வைப்பது குறித்தும் இருளையும் ஒளியையும் சமநிலைப்படுத்தி காட்சிகளை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் சந்தோஷ் சிவன் விளக்கினார்.
தமது வித்தியாசமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட சந்தோஷ் சிவன், வெவ்வேறு வகையான திரைப்படங்களுக்கு தனித்துவமான வகையில் ஒளிப்பதிவு தேவை என்று குறிப்பிட்டார். கலையம்சம் கொண்ட படங்கள் முதல் வணிகப் படங்கள் வரை பல படங்களில் தாம் பணிபுரிந்திருப்பதை அவர் எடுத்துரைத்தார். அனைத்திற்கும் முறையான தொழில்முறை செயல்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தாம் பணியாற்றிய அனைத்து படங்களிலிருந்தும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாகவும் சந்தோஷ் சிவன் கூறினார்.
-----
(Release ID: 2026301)
AD/PLM/KPG/RR
(रिलीज़ आईडी: 2026467)
आगंतुक पटल : 104