ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அடுத்த 100 நாட்களுக்கான பல்வேறு திட்டங்களின் செயல் திட்டம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் ஆலோசனை

Posted On: 15 JUN 2024 3:18PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சௌகான், அமைச்சகத்தின் அடுத்த 100 நாட்களுக்கான செயல் திட்டம் குறித்து நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்த செயல் திட்டத்தை வலுவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஊரக வளர்ச்சிக்கான ஒவ்வொரு திட்டத்திலும் அனைவரும் முழு பலத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என்றும் அவர் கூறினார்.

தேசிய சமூக உதவித் திட்டம் (என்.எஸ்.ஏ.பி) பற்றி விவாதிக்கும் போது, முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த வாழ்க்கைக்கான திட்டத்தை கட்டமைக்க வேண்டும், அதற்காக ஒவ்வொரு பிரச்சினையையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதற்காக, திட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், திருத்தங்களும் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், திஷா குழுக்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர்கள் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, திரு கமலேஷ் பாஸ்வான், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

***


AD/RB/DL


(Release ID: 2025702) Visitor Counter : 99