ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் அமைச்சகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்: 100 நாள் செயல்திட்டத்தை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்
Posted On:
14 JUN 2024 6:58PM by PIB Chennai
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன் இணைந்து ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான வளர்ச்சியடைந்த பாரதம் 2047 மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார், மேலும் துறையின் 100 நாள் வேலைத்திட்ட இலக்கை அடைவதற்கு அமைச்சர் சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.
தொழில்துறைக்கு வசதி செய்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் திறன் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை செயலாளர், தற்போதுள்ள வர்த்தக நிலவரம் மற்றும் வரும் 5 ஆண்டுகளில் ரசாயனத் துறையின் கணிப்புகள் குறித்து விளக்கினார். துறையின் தற்போதைய திட்டங்கள், துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்தும் செயலாளர் விளக்கினார். துறையால் இறுதி செய்யப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு மத்திய அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேவையற்ற இறக்குமதியை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறைகளில் வேகம், அளவு மற்றும் திறன் ஆகியவற்றைக் கொண்டு வர இத்துறை முயற்சிக்க வேண்டும். திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும், மேலும் இதுபோன்ற திட்டங்களில் தொழில்துறையும் சேர்க்கப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் தொழில்துறை சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். நாட்டை தற்சார்பு கொண்டதாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
***
AD/PKV/DL
(Release ID: 2025522)
Visitor Counter : 48