சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
கொல்கத்தாவில் 'குற்றவியல் நீதி அமைப்பை நிர்வகிப்பதில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற தலைப்பிலான மாநாட்டை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நாளை நடத்துகிறது
Posted On:
15 JUN 2024 11:58AM by PIB Chennai
2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", "பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023" மற்றும் "பாரதிய சாக்ஷயா அதினியம், 2023" ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அறிவிக்கப்பட்டபடி, இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, இந்தப் புதிய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதுதில்லி மற்றும் குவஹாத்தியில்இரண்டு பெரிய மாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முயற்சியைத் தொடர்ந்து, ஜூன் மாதம் கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பையில் இதுபோன்ற மேலும் மூன்று மாநாடுகளை நடத்த அமைச்சகம் உத்தேசித்துள்ளது. 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற தலைப்பில் கொல்கத்தாவில் நடைபெறும் மாநாடு கொல்கத்தாவில் உள்ள ஐடிசி ராயல் பெங்கால் ஹால்டேன் அவென்யூவில் நாளை நடைபெறுகிறது. கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் உரையாற்றுகிறார்.
அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள், விவாதங்கள் மற்றும் கேள்வி பதில் அமர்வுகள் மூலம் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்களை வெளிக்கொணர்வதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள், பல்வேறு உயர்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இது தவிர, இதர புலனாய்வு முகமைகளின் அதிகாரிகள், அரசு வழக்கு நடத்துனர்கள், மாவட்ட நிர்வாகம், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சட்ட மாணவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
தொடக்க அமர்வு இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பின் கட்டமைப்பை மறுவரையறை செய்யும். அதன் குடிமக்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய நோக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும். தொடக்க அமர்வில் சொற்பொழிவுகளுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு புதிய சட்டத்திலும் ஒன்று என மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் இருக்கும்:
தொழில்நுட்ப அமர்வுகளைத் தொடர்ந்து நிறைவு அமர்வு நடைபெறும். மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
சமீபத்திய ஆண்டுகளில், பழங்கால காலனித்துவ சகாப்த சட்டங்களை ரத்து செய்வதற்கும், குடிமக்களை மையமாகக் கொண்ட மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சட்டங்களை இயற்றுவதற்கும் இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.
பங்குதாரர்கள் மற்றும் குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குற்றவியல் சட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் தடையின்றி செயல்படுத்துவதற்கும் இந்த மாநாடு பங்களிக்கும்.
***
AD/PKV/DL
(Release ID: 2025516)
Visitor Counter : 110