உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளீதர் மொஹோல் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
13 JUN 2024 8:21PM by PIB Chennai
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு முரளீதர் மொஹோல் புதுதில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, செயலாளர் திரு. வும்லுன்மாங் வுல்நம் மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தப் பொறுப்பை தம்மிடம் ஒப்படைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில், இந்த அமைச்சகம் இத்துறையில் வசதிகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளதுடன் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். விமான நிலையங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இத்துறையின் மேம்பாட்டுக்கு தாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் புனே தொகுதியிலிருந்து பதினெட்டாவது மக்களவைக்குத் திரு முரளீதர் மொஹோல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
***
SMB/PLM/AG/KV
(रिलीज़ आईडी: 2025259)
आगंतुक पटल : 116