பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்காக நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 13 JUN 2024 6:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம் என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும்  நிர்வாக சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்த அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் மூத்தக் குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டிஜிட்டல் அதிகாரமளித்தலை நோக்கி அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.

பொது மக்களின் நலன்களை மையமாகக் கொண்டே அரசின் சீர்திருத்தங்கள் அமைந்துள்ளதாக அவர் கூறினார். திறன் வாய்ந்த பொதுச் சேவை வழங்கல், வலுவான குறை தீர்க்கும் நடைமுறைகள் ஆகியவற்றின் மூலமும், புதிய தலைமுறை தொழில்நுட்பங்களுடனும் நிர்வாகத்தை மேம்படுத்துவதால் மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்த முடியும் என்றார்.

பல்வேறு நடைமுறைகளில் எதிர்காலத்திற்கு ஏற்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அரசுத் துறைகளின் செயல்திறனை அதிகரிக்க தனித்துவமான திறன் மேம்பாட்டு நிகழ்வுகளை  நடத்த வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

***

SMB/PLM/AG/KV



(Release ID: 2025247) Visitor Counter : 33