தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

2024 டாக் ஃபிலிம் பஜாரின் முதல் பதிப்பில் ஆவணப்பட தொகுப்பாக்க ஆய்வகப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் அறிவிப்பு

Posted On: 31 MAY 2024 7:05PM by PIB Chennai

2024 மும்பை சர்வதேச திரைப்பட விழா உடன் இணைந்து நடத்தப்படும் டாக் ஃபிலிம் பஜாரின் முதல் பதிப்பில் ஆவணப்பட தொகுப்பாக்க ஆய்வகப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை  தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.

ஆவணப்பட தொகுப்பாக்க ஆய்வகம் என்பது முதல்கட்ட தொகுப்பு நிலையில் உள்ள படங்களுக்கான பிரத்யேக ஆய்வகமாகும். இந்தப் பிரிவில்  தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்துறை நிபுணர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதுடன், அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் கருத்துக்களையும்  பெற்று பயனடைவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மனித விவரிப்புகளை முன்னிலைப்படுத்துவதுடன், எண்ணற்ற கருப்பொருள்களையும் ஆராய்கின்றன. அவை பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மற்றும் அதிகம் சித்தரிக்கப்படாத கதைகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தத் திரைப்பட இயக்குநர்களுக்கும், அவர்களின் படைப்புகளுக்கும் தேவையான ஆதரவை வழங்குவதை ஆய்வகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநரும், டாக் ஃபிலிம் பஜாரின் இயக்குநருமான திரு. பிரிதுல் குமார்,  "டாக் ஃபிலிம் பஜார், அதன் முதல் பதிப்பு பல பிராந்தியங்களிலிருந்து ஏராளமான திரைப்படங்களை ஈர்த்துள்ளது. இது திரைப்பட வகை, இடம், மொழி, குரல், அடையாளம் ஆகியவற்றைக் கடந்து வெற்றிகரமான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கு எங்களை ஊக்குவிக்கிறது. இது மொத்தம் 107 உள்ளீடுகளையும் (ஆவணப்பட திரையிடுதல் அறை பிரிவு) 30 சமர்ப்பிப்புகளையும் (ஆவணப்பட தொகுப்பாக்க ஆய்வகப் பிரிவு) பெற்றது. இவற்றில் 5 நம்பிக்கைக்குரிய படைப்புகள் தொகுப்பாக்க ஆய்வகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிரபல திரைப்பட வல்லுநர்களின் வழிகாட்டுதலால் படைப்புகளை மேம்படுத்தும் சிறந்த வாய்ப்பை இந்தத் தளம் வழங்கும்”, என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022363

 

***

PKV/BR/RR



(Release ID: 2024915) Visitor Counter : 19