தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
டாக் ஃபிலிம் பஜார் 2024-ன் முதல் பதிப்பில் தனது முதல் ஆவணப்பட இணைத் தயாரிப்பு சந்தைப் படைப்புகளைத் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் தேர்வு செய்தது
Posted On:
31 MAY 2024 6:39PM by PIB Chennai
2024 ஜூன் 16 முதல் 18 வரை மும்பையில் நடைபெறவுள்ள டாக் ஃபிலிம் பஜாரின் முதல் பதிப்பிற்கான ஆவணப்பட இணைத் தயாரிப்பு சந்தைப் படைப்புகளின் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடக்க பதிப்பிற்காக, டாக் பிலிம் பஜார், ஆவணப்பட இணைத் தயாரிப்பு சந்தையின் ஒரு பகுதியாக 15 படைப்புகளை முன்வைக்கிறது. இவை தெற்காசிய புலம்பெயர்ந்தோரை மையமாகக் கொண்ட உலகளாவிய கதைகளாக உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தோன்றிய ஏராளமான கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த கதைகளின் வளமான திரையிடலை இந்த வரிசை பிரதிபலிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை சர்வதேச மற்றும் இந்திய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விழா நிகழ்ச்சியாளர்கள், நிதியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் முன் எடுத்துரைப்பார்கள். இந்த நிகழ்வு, விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநரும், டாக் ஃபிலிம் பஜாரின் இயக்குநருமான திரு. பிரிதுல் குமார், "டாக் ஃபிலிம் பஜாரின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றான ஆவணப்பட இணைத் தயாரிப்பு சந்தை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு நிதி மற்றும் ஆதரவை வழங்குகிறது. டாக் ஃபிலிம் பஜாரில் நடந்த முதல் டாக் சந்தைக்காக 10 நாடுகளில் இருந்து 27 மொழிகளில் 62 கருத்துருக்களைப் பெற்றோம். திரையுலகைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் 15 படங்களை ஆய்வு செய்து தேர்வு செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்”, என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022354
***
PKV/BR/RR
(Release ID: 2024913)