ரெயில்வே அமைச்சகம்
மத்திய ரயில்வே துறை இணையமைச்சராக திரு ரவ்னீத் சிங் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
11 JUN 2024 3:34PM by PIB Chennai
மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சராக திரு ரவ்னீத் சிங் இன்று ரயில் பவனில் பொறுப்பேற்றார். அவருக்கு உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ஜெயவர்மா சின்ஹா, ரயில்வே உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு ரவ்னீத் சிங், "இன்று நான் ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பிஜேபி தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான திரு ஜே.பி.நட்டா, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்ட அவர், நாட்டு மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் திரு நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ரயில்வே துறை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
***
SRI/IR/AG/DL
(रिलीज़ आईडी: 2024331)
आगंतुक पटल : 144