தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டின் 112-வது அமர்வில் இந்தியாவின் முத்தரப்புப் பிரதிநிதிகள் பங்கேற்பு

Posted On: 10 JUN 2024 6:57PM by PIB Chennai

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டின் 112-வது அமர்வில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையிலான இந்திய முத்தரப்புக் குழு பங்கேற்றுள்ளது. இதில் தொழிலாளர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்கள், சமூகப் பாதுகாப்பு விதிகள், பிற புதிய முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்த அமர்வின் முதல் வாரத்தில் இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியது. சர்வதேசத் திறன்  இடைவெளி, தொழிலாளர்களின் சர்வதேச இடப்பெயர்வு, வேலையின் எதிர்காலம் போன்ற கவனம் செலுத்தும் பகுதிகளில் இருதரப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் குறித்துத் தொடக்க அமர்வு மற்றும் சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டின் பிற குழுக்களில் இந்தியா பங்கேற்றது.

தொழிலாளர் சீர்திருத்தங்களை அமல்படுத்துதல், சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல், அனைவருக்கும், குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குதல், பெண் தொழிலாளர் சக்தியின் பங்களிப்பை ஊக்குவித்தல், புதியவற்றை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் "புதுப்பிக்கப்பட்ட சமூக ஒப்பந்தத்தை நோக்கி" மற்றும் இந்திய அரசின் முக்கிய முன்னெடுப்புகள் குறித்து திருமதி சுமிதா தவ்ரா தொடக்க  அமர்வில் உரையாற்றினார்.  

***

(Release ID: 2023805)

SMB/IR/AG/RR



(Release ID: 2024005) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi , Punjabi