குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரை செஷல்ஸ் துணை அதிபர் சந்தித்தார்
Posted On:
10 JUN 2024 6:44PM by PIB Chennai
செஷல்ஸ் குடியரசின் துணை அதிபர் திரு அகமது அஃபிஃப் இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.
புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற புதிய அரசின் பதவியேற்பு விழாவில் துணை அதிபர் அஃபிஃப் செஷல்ஸ் நாட்டின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்
செஷல்ஸின் வளர்ச்சி விருப்பங்களுக்கு ஆதரவளிக்கவும், மக்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை குடியரசுத் தலைவர் முர்மு மீண்டும் உறுதிப்படுத்தினார்.
செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவான் மற்றும் செஷல்ஸ் மக்களின் வாழ்த்துக்களை அதிபர் திரௌபதி திரமுவிடம் தெரிவித்த துணை அதிபர் அஃபிப், தமது முதல் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். செஷல்ஸில் இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மை ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டு உதவி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
***
PKV/RS/DL
(Release ID: 2023823)