பாதுகாப்பு அமைச்சகம்
துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் 2024, ஜூன் 15, அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பை விமானப்படை தளபதி பார்வையிட உள்ளார்
Posted On:
10 JUN 2024 3:18PM by PIB Chennai
ஹைதராபாத்தில் உள்ள துண்டிகலில் அமைந்துள்ள விமானப்படை அகாடமியில் 213 அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு 2024 ஜூன் 15 அன்று பாரம்பரிய ராணுவ சிறப்புடன் நடைபெறும். விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளார்.
இவ்விழாவில் அவர், பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். இந்த விழாவில் விமானப் பயிற்சி வீரர்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் வெற்றிகரமாக விமானப் பயிற்சியை நிறைவு செய்யும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்குவார்.
தகுதி வரிசையில் முதலிடம் பெறும் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த விமானப் பயிற்சி வீரருக்கு ஒட்டுமொத்தப் பயிற்சியில் சிறந்து விளங்கியதற்காக விமானப்படைத் தளபதியின் கௌரவ விருது மற்றும் குடியரசுத்தலைவரின் பதக்கம் வழங்கப்படும்.
***
ANU/PKV/IR/KPG/KV
(Release ID: 2023739)
Visitor Counter : 96