பாதுகாப்பு அமைச்சகம்
கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் 25-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவ துணைத் தளபதி பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
08 JUN 2024 7:11PM by PIB Chennai
கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் வெள்ளி விழா (25வது) நிறைவு அணிவகுப்பு ஜூன் 08, 2024 அன்று நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மொத்தம் 118 பயிற்சி அதிகாரிகள் இறுதிகட்ட பயிற்சியினை முடித்து இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸில் அதிகாரிகளாக இணைந்தனர்.
ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக இருந்தார். திறமையான, மிடுக்கான மற்றும் ஒத்திசைக்கப்பட்ட பயிற்சி நிறைவு அணிவகுப்பு அனைத்து பார்வையாளர்களிடையேயும் பெருமை உணர்வைத் தூண்டின. அகாடமியின் கீழ் அதிகாரி பங்கஜ் சர்மா 25-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பின் தளபதியாக இருந்தார். பயிற்சியின் போது முன்மாதிரியான செயல்திறனை வெளிப்படுத்திய பயிற்சி அதிகாரிகளுக்கு துணை ராணுவத் தளபதி பதக்கங்களை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023619
***
AD/PKV/DL
(रिलीज़ आईडी: 2023627)
आगंतुक पटल : 130