சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கின் ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை நாடு முழுவதும் புற நோயாளிகள் பிரிவில் 3 கோடி பதிவுகளை எளிதாக்குகிறது

Posted On: 06 JUN 2024 7:22PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் அடிப்படையிலான ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை மூலம் புற நோயாளிகள் பிரிவு பதிவுகளுக்கு 3 கோடிக்கும் அதிகமான டோக்கன்களை உருவாக்குவதன் மூலம் சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அதன் பணியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை தேசிய சுகாதார ஆணையம் அடைந்துள்ளது.

அக்டோபர் 2022-ல் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்தப் புதுமையான காகிதமில்லா சேவை, நோயாளி அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு பயனளிக்கிறது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் அடிப்படையிலான ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவையானது, புற நோயாளிகள் பிரிவு பதிவு கவுன்டரில் காட்டப்படும் கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நோயாளிகள் பயன்பெற உதவுகிறது.

இந்த சேவை தற்போது இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 546 மாவட்டங்களில் உள்ள 5435க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில் செயல்பட்டு வருகிறது.  தினமும் சராசரியாக 1.3 லட்சம் பேர் இதைப் பயன்படுத்துகின்றனர்.

***

(Release ID: 2023289)

SMB/BR/RR



(Release ID: 2023393) Visitor Counter : 25